Enable Javscript for better performance
பொறியியல் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பம்- Dinamani

சுடச்சுட

    

    பொறியியல் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பம்

    By திண்டுக்கல்  |   Published on : 02nd May 2014 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் சனிக்கிழமை (மே 3) முதல், அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் வழங்கப்படும் என, டீன் ஜி. இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

    தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில், மே 9ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வுத் துறை இயக்குநரகம் அறிவித்துள்

    ளது. இந் நிலையில், பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் விண்ணப்பங்கள் வழங்கும் பணிகள் தொடங்கவுள்ளன.

    இது குறித்து, திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி டீன் ஜி. இளங்கோவன் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தது: மே 3 முதல் 20ஆம் தேதி வரையிலும், பழனி சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட உள்ளன. அரசு விடுமுறை நாள்கள், ஞாயிற்றுக்கிழமை மற்றும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்படும் மே 16ஆம் தேதி ஆகிய நாள்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படமாட்டாது. விண்ணப்பக் கட்டணமாக எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 250, இதர பிரிவினருக்கு ரூ. 500 செலுத்தவேண்டும். கட்டண சலுகை பெற விரும்புவோர், சாதி சான்றிதழ்களின் நகலை உடன் எடுத்து வரவேண்டும். சாதி சான்றிதழில் அரசு அலுவலரின் கையொப்பம் பெற தேவையில்லை.

    விண்ணப்பக் கட்டணத்தை ரொக்கமாகவும், வரைவோலையாகவும் செலுத்த வேண்டும். டிஎன்இஏ அண்ணா பல்கலைக்கழகம் (பட்ங் ள்ங்ஸ்ரீழ்ங்ற்ஹழ்ஹ், பஹம்ண்ப்ய்ஹக்ன் உய்ஞ்ண்ய்ங்ங்ழ்ண்ய்ஞ் ஹக்ம்ண்ள்ள்ண்ர்ய், அய்ய்ஹ ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்) என்ற முகவரியில், சென்னை கிளையில் செலுத்தத்தக்க வகையில் வரைவோலை பெறவேண்டும்.

    முதல்கட்டமாக, 4 ஆயிரம் விண்ணப்பப் படிவங்கள் வந்துள்ளன. தேவைக்கு ஏற்ப கூடுதல் விண்ணப்பங்களை பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai