Enable Javscript for better performance
லாரி டிரைவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பழனி அருகே செங்கல் ஏற்ற வந்த லாரி டிரைவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நரகனியைச் சேர்ந்தவர் காத்தான் மகன் பாண்டி (38). இவர் காரைக்குடி அழகுமலையான் லாரி டிரான்ஸ்போர்ட்டில் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    புதன்கிழமை பழனி அருகே சின்னக்காந்திபுரத்தில் உள்ள ஸ்ரீமுருகன் சேம்பருக்கு செங்கல் லோடு ஏற்ற வந்த பாண்டி சேம்பர் அருகே இருந்த மரத்தடியில் நின்ற போது மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மற்றவர்கள் வந்து பார்த்தபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்திருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சேம்பர் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி (55) கொடுத்த புகாரின் பேரில் பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai