Enable Javscript for better performance
காலிகுடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    காலிகுடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

    By திண்டுக்கல்,  |   Published on : 03rd May 2014 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல்லை அடுத்துள்ள வடமதுரையில் குடிநீர் கோரி பொதுமக்கள் காலிகுடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாவே போதிய மழை இல்லாதால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    வடமதுரை ஒன்றியம் வேல்வார்கோட்டை பஞ்சாயத்துக்கு உள்பட்ட சீலப்பாடியான்களம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 6 மாதங்களாக குடிநீரின்றி பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டாக காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தினமும் ஒன்றிரண்டு குடங்கள் அந்தத் தண்ணீர் கிடைத்தது. தற்போது அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டதாம். இதனால் ஆத்திரமடைந்த சீலப்பாடியான்களம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். அலுவலக வாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai