Enable Javscript for better performance
குடிநீர் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    பாப்பனம்பட்டி கிராம மக்கள் குடிநீர் கோரி வெள்ளோடு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இந்த பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் பெறப்பட்டு மேல்நிலை தொட்டிக்கு ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டது. காவிரி கூட்டுக்குடிநீரும் வழங்கப்படவில்லையாம். பாப்பனம்பட்டி கிராமத்தில் ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். கிராம மக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் நடந்து சென்று, பக்கத்தில் இருக்கும் கிராமங்களிலும், தனியார் தோட்டங்களிலும் தண்ணீர் எடுத்து வந்தனராம்.

    காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தனியார் மருத்துவமனைக்கு தண்ணீர் வழங்கப்படுவதாகவும், கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்தும், வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் பாப்பனம்பட்டி கிராம மக்கள் வெள்ளோடு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்த அம்பாசமுத்திரம் போலீஸார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை கலைந்து போகச் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai