Enable Javscript for better performance
குடிநீர் பிடிப்பதில் தகராறு: பெண்ணைத் தாக்கிய 5 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் பிடிப்பதில் தகராறு: பெண்ணைத் தாக்கிய 5 பேர் மீது வழக்கு

    By பழனி,  |   Published on : 03rd May 2014 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனி அருகே பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் பெண்ணை தாக்கியதாக ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பழனி அருகே பச்சளநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சண்முகராஜ் மனைவி கிருஷ்ணவேணி(21). கடந்த திங்கள்கிழமை கிருஷ்ணவேணி ஊர் பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்த போது அதே ஊரை சேர்ந்த பெரியதுரை, பன்னீர், வீரக்குமார், கன்னியாத்தாள் மற்றும் அப்பாண்டு ஆகியோருடன் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்பு வியாழக்கிழமை தனது தாத்தா வீட்டுக்கு கிருஷ்ணவேணி சென்ற போது ஐந்து பேரும் முன்விரோதம் காரணமாக அவரை அசிங்கமாக பேசி தாக்கினராம். இதையடுத்து ஊமைக்காயம் அடைந்த கிருஷ்ணவேணி பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சத்திரப்பட்டி போலீஸார் ஐந்து பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai