Enable Javscript for better performance
கொடைக்கானலில் சாரல் மழையிலும் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள்- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் சாரல் மழையிலும் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள்

    By கொடைக்கானல்  |   Published on : 03rd May 2014 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானலில் சாரல் மழையிலும் படகு சவாரி செய்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை பிற்பகலில் சிறிது நேரம் லேசான சாரல் மழை பெய்தது. சுற்றுலா இடங்களான குணா குகை, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர்ராக் ஆகிய இடங்களில் சிறிது நேரம் மழை பெய்தது. இந்த குளுமையான சீதோஷ்ண நிலையும் மேகமூட்டமும் நிலவியது. ரம்மியமான சூழ்நிலையில், கொடைக்கானல் ஏரியில் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    மாலை வேளையில் அதிகமான பயணிகள் ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி மற்றும் நடை பயிற்சியில் ஈடுபட்டனர். ஏரிச்சாலையிலுள்ள நடைபாதைகளில் அமைக்கப்பட்டுள்ள கற்கள் சேதமடைந்தும், ஏரிக்குள் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களும், சாலையோரங்களில் குப்பைகளும் நிறைந்து காணப்படுகின்றது.

    மேலும் ஏரியைச் சுற்றியுள்ள கழிப்பறைகள் பயனற்ற நிலையில் இருந்து வருகிறது இவற்றையும் சரி செய்தால் பொது மக்கள் சாலையோரங்களை பொது கழிப்பறையாக பயன்படுத்த மாட்டார்கள். எனவே நகராட்சி நிர்வாகம் ஏரிச்சாலைப் பகுதியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது குறித்து சுகாதாரத்துறை ஆய்வாளர் அசன்முகமது கூறியதாவது: கொடைக்கானலில் சீசனை முன்னிட்டு கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு துப்புரவுப் பணி மேற்கொள்ளப்படும். தேர்தல் விதிமுறைகள் நிலுவையில் உள்ளதால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப் பெற்று கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு சுற்றுலா இடங்கள் தூய்மைப்படுத்தப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai