Enable Javscript for better performance
கொடைக்கானல் ஏரியில் கடலோரபாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் ஏரியில் கடலோரபாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி

    By கொடைக்கானல்,  |   Published on : 03rd May 2014 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானல் ஏரியில் கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் படகு பயிற்சி பெற்றனர்.

    கொடைக்கானல் ஏரியில் கடலோர பாதுகாப்பு படையின் கூடுதல் காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு தலைமையில் கடலோர பாதுகாப்பு படை குழுமத்தைச் சேர்ந்த 17 அதிரடிப்படை வீரர்கள் கடந்த மூன்று நாள்களாக படகுப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இப்படை வீரர்கள் ஏற்கெனவே கடலில் பயிற்சி பெற்றுள்ளனர். மலைப் பகுதிகளிலும் பயிற்சி பெற வேண்டும் என்ற நோக்கில் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப் பயிற்சி பெற்ற வீரர்கள் சென்னை கடலில் சிறப்பு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பயிற்சி இயக்குநர் சைலேந்திரபாபு கூறினார்.

    வாகனச் சோதனை: கொடைக்கானலில் சீசன் களைகட்டத் தொடங்கியதை முன்னிட்டு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து கொடைக்கானல் வரும் அனைத்து வாகனங்களையும் காவல் துறையினர் பழனி சாலை, பெருமாள்மலை, செண்பகனூர் மற்றும் சுற்றுலா இடங்களிலும் சோதனையிட்டு வருகின்றனர். மேலும் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 200-காவலர்களும், 20 ரோந்து வாகனங்களும் இப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக டி.எஸ்.பி.மோகன்குமார் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai