Enable Javscript for better performance
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு- Dinamani

சுடச்சுட

    

    தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு

    By திண்டுக்கல்,  |   Published on : 03rd May 2014 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழைகளுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

    மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அறிக்கை: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் பள்ளிகளைத் தவிர அனைத்து சுயநிதி பள்ளிகளிலும் (நர்சரி மற்றும் பிரைமரி, தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள்) ஏழைகளுக்கு ஆரம்பநிலை வகுப்பில் 25 இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. நலிவடைந்த பிரிவினர் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் இதில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

    நலிவடைந்த பிரிவினருக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் ஒதுக்கீட்டில், தாழ்த்தப்பட்ட பிரிவினர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர், பெற்றோரை இழந்த குழந்தைகள், துப்பரவு பணியாளர்களில் குழந்தைகள் பயன்பெறலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் தெரிவித்துள்ளர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai