Enable Javscript for better performance
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பழனி அருகே பாலசமுத்திரம் 7வது வார்டு மருதகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் மகள் அனிதா(16). கடந்த வியாழக்கிழமை ஊர்த்திருவிழாவின் போது பாட்டுக்கச்சேரி நடைபெற்ற போது அனிதாவை அதே ஊரை சேர்ந்த காளிமுத்து மகன் மகுடீஸ்வரன்(25), சண்முகம் மகன் ரமேஷ்(35), காளிமுத்து மகன் சங்கிலிதுரை(25), ரங்கசாமி(23), கனகராஜ்(29) மற்றும் மருதகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சந்தானம் மகன் பெருமாள் ஆகியோர் கிண்டல் செய்துள்ளனர். பின்னர் 5பேரும் அனிதாவின் வீட்டுக்குச் சென்று அவரையும், அவரது சகோதரர் பிரபாகரனையும் ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காயமடைந்த இருவரும் பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அனிதா கொடுத்த புகாரின் பேரில் பெருமாளை தவிர மற்ற ஐந்து பேரையும் பழனி தாலுகா போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai