Enable Javscript for better performance
மருமகள் புகார்: மாமியார் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    பழனி அடிவாரம் குரும்பப்பட்டியை சேர்ந்த பழனி மனைவி வீரம்மாள்(55). வீரம்மாள் மகள் பிரியங்காவை அதே ஊரை சேர்ந்த ஈஸ்வரபட்டா கோயில் பகுதியை சேர்ந்த கோபால் மகன் சங்கர்கணேஷ் என்பவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணம் செய்து வைத்தார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் பிரியங்கா தனது துணிமணிகளை எடுக்க சங்கர் கணேஷ் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்றுள்ளார். அப்போது வீட்டின் படியில் அமர்ந்திருந்த மாமியார் ராஜாத்தி(55), சங்கர்கணேஷின் தம்பி ஜீவானந்தம்(19) ஆகியோர் அவதூறாகப் பேசி வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்தனராம். இதுகுறித்து பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் வீரம்மாள் கொடுத்த புகாரின் பேரில் ராஜாத்தி, ஜீவானந்தம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai