Enable Javscript for better performance
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை தினமும் சரிபார்க்கப்படுகிறது: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை தினமும் சரிபார்க்கப்படுகிறது: ஆட்சியர்

    By திண்டுக்கல்,  |   Published on : 03rd May 2014 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டப்பேரவை தொகுகளிலும் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தினமும் சரிபார்க்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று இம்மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 1616 வாக்குச் சாவடிகளிலும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சில்வார்பட்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் யாவும் தேர்தல் பொதுப் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட

    ஆட்சியர், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியேர் தலைமையில் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் முன்னிலையில் தினமும் சரி பார்க்கப்படுகிறது.

    இந்த அறைக்கு இரட்டைத் திறவு கோல் பூட்டினால் பூட்டி முத்திரையிடப்பட்டுள்ளது. இந்த முத்திரை மீது அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்கள், அவர்களது முகவர்களின் முன்னிலையில் முத்திரையிடப்பட்டுள்ளது.

    மேலும், மேற்கண்ட அறைகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் அடுக்கு பாதுகாப்பில் மத்திய தொழிற்பாதுகாப்பு காவல் படையினரும், இரண்டாவது அடுக்கு பாதுகாப்பில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும், மூன்றாவது அடுக்கு பாதுகாப்பில் தமிழ்நாடு காவல்துறையினரும் என மொத்தம் 340 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரவு-பகல் 24 மணி நேரமும் அந்த அறை பாதுகாக்கப்பட்டுவருகிறது.

    இதுதவிர அனைத்து பாதுகாப்பு அறைகளிலும் 25 சிசிடிவி கேமிரா மூலமாக கண்காணிக்கப்பட்டு அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது தவிர பல்கலைக்கழக வரவேற்பறையில் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்களை கொண்ட கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டு 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.

    வாக்குப்பதிவுகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பாதுகாப்புடன் இருந்து வருகிறதா என கண்காணிக்கும் பொருட்டு அனைத்து வேட்பாளர்களும் தங்களது பிரதிநிதிகள் ஒருவரை (8 மணிக்கு ஒருவர் வீதம்) கண்காணிப்பதற்கு நியமித்துக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்குகள் எண்ணும் இடமான சில்வார்பட்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக் கழக பொறியியற் கல்லூரியினை தினந்தோறும் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பாதுகாப்பு உரியமுறையில் உள்ளதை என்பதை உறுதி செய்யபடுகிறது.

    இதுதவிர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாலும் தினந்தோறும் பார்வையிடப்பட்டு பாதுகாப்பு நல்லமுறையில் உள்ளது என்பதை உறுதி செய்யப்பட்டு வருகிறது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai