Enable Javscript for better performance
அண்ணா பல்கலை. பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகம் தொடக்கம் - Dinamani

சுடச்சுட

    

    அண்ணா பல்கலை. பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகம் தொடக்கம்

    By திண்டுக்கல்  |   Published on : 04th May 2014 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    :திண்டுக்கல்லில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் சனிக்கிழமை அண்ணா பல்கலைக்கழகப் பொறி யியல் கல்லூரியில் தொடங்கியது.

    தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்த நிலையில், மே 9ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வுத் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து, திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி டீன் ஜி. இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    திண்டுக்கல்- பழனி சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படுகின்றன. மொத்தம் 4 ஆயிரம் விண்ணப்பப் படிவங்கள் வந்துள்ளன. முதல் நாளான சனிக்கிழமை விண்ணப்பங்களை 1300க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பெற்றுள்ளனர். விண்ணப்ப விநியோகம் அரசு விடுமுறை நாள், ஞாயிற்றுக்கிழமை மற்றும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்படும் மே 16ஆம் தேதி ஆகிய நாள்களில் வழங்கப்படமாட்டாது.

    விண்ணப்பக் கட்டணமாக எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 250, இதர பிரிவினருக்கு ரூ. 500 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் மே 20 தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai