Enable Javscript for better performance
கடையை உடைத்து செல்போன் திருடியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கடையின் பூட்டை உடைத்து செல்போன் திருடிய நபர் பிடிபட்டார்.

    பழனி சுப்ரமண்யபுரம் சாலையில் பிரபல தனியார் செல்போன் விற்பனை நிலையம் உள்ளது. வியாழக்கிழமை இரவு விற்பனை முடிந்தவுடன், மேலாளர் முகமது உசேன்(28) வழக்கம் போல் கடையை அடைத்து விட்டுச் சென்று விட்டார்.

    வெள்ளிக்கிழமை காலை கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டை உடைத்து மர்மநபர் செல்போன்களைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து மேலாளர் முகமது உசேன் கொடுத்த புகாரில், பழனி காமராஜ் நகரை சேர்ந்த பிரசாந்த்(17) மீது சந்தேகம் இருப்பதாக கூறியதையடுத்து போலீஸார் பிரசாந்தை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரசாந்த் செல்போன்களை திருடியது தெரிய வந்ததையடுத்து அவரை கைது செய்து செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai