Enable Javscript for better performance
கொடைக்கானலில் ஹோட்டல் சங்க ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் ஹோட்டல் சங்க ஆலோசனைக் கூட்டம்

    By கொடைக்கானல்,  |   Published on : 04th May 2014 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானலில் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ் அசோஷியேசன்ஸ் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு கௌரவத் தலைவர் சாகுல்ஹமீது தலைமை வகித்தார். சுகுமார் வரவேற்றார். ஸ்ரீநாத் முன்னிலை வகித்தார். கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நகர்மன்றத் தலைவர்(பொறுப்பு)எட்வர்ட்

    சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான சுத்தம், சுகாதாரம், கழிப்பறை வசதி ஆகியவை நகராட்சி நிர்வாகம் மூலம் செய்து கொடுக்கப்படும் என்றார்.

    அதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி.மோகன்குமார் பேசும்போது, சுற்றுலா இடங்களில் பயணிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கண்காணிப்பு தீவிரமாக்கப்படும் என்றார்.

    கூட்டத்தில் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் கண்ணன், சங்க செயலர் அப்துல்கனிராஜா, இன்ஸ்பெக்டர் கருணாகரன், சங்க மேலாளர் சுரேஷ் மற்றும் விடுதி உரிமையாளர்கள்,மேலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai