செல்போன் கடையில் தகராறு: இருவர் கைது
By பழனி | Published on : 04th May 2014 12:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பழனி அருகே அமரபூண்டி தெற்குத் தோட்டத்தை சேர்ந்தவர் கண்ணுத்துரை(33). இவர் புதுதாராபுரம் சாலையில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு வெள்ளிக்கிழமை சத்யா நகரை சேர்ந்த பிரபு(25), குபேரபட்டிணம் காளிமுத்து(28) ஆகியோர் வந்து பழைய செல்போனை கொடுத்து விற்றுத்தரும்படி கூறியுள்ளனர். அதற்கு கண்ணுத்துரை வாங்க மறுத்துள்ளார். இதனால் தகராறு ஏற்பட்டது. கண்ணுத்துரை கொடுத்த புகாரின் பேரில் பழனி டவுன் போலீஸார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.