Enable Javscript for better performance
திண்டுக்கல் அருகே மண் சரிந்து விழுந்து 2 பேர் சாவு - Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் அருகே மண் சரிந்து விழுந்து 2 பேர் சாவு

    By திண்டுக்கல்  |   Published on : 04th May 2014 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல்- வேடசந்துôர் சாலையில் உள்ள லட்சுமணப்பட்டி அருகே உள்ள குடக ஆற்றில் சிலர் அனுமதியின்றி மணல் அள்ளிவந்ததாக கூறப்படுகிறது. இப்பகுதியில் சனிக்கிழமை தாடிக்கொம்பு மேல்கரைபுதூரைச் சேர்ந்த கணேசன் (46), காமாட்சிபுரத்தைச் சேர்ந்த முருகன் (45), கிரியம்பட்டி காளியப்பன் (40), சத்திரப்பட்டி முருகேஸ்வரி (32), பாப்பா (40) ஆகிய 5 பேர் சட்டவிரோதமாக மணல் அள்ளினார்களாம். அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்தது. இதில் கணேசன், முருகன் ஆகியோர் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டனர். இதனால் அவர்கள் இருவரும் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

    மற்ற 3 பேரும் உயிர் தப்பினர். தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து தாடிகொம்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai