Enable Javscript for better performance
பழனி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    பழனி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி

    By பழனி  |   Published on : 04th May 2014 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனி அருகே வி.கே.மில்ஸ் விஜயபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் நிதிநிறுவனம் மற்றும் டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார். கடந்த 29ஆம் தேதி மாரடைப்பால் சதீஷ்குமார் இறந்துபோனார். இந்நிலையில் இவரது இறப்பை தாங்காமல் மனைவி செüமியாப்ரியா(24), மாமனார் ராஜாமணி(55), மாமியார் சத்யா(50) மற்றும் மனைவி சகோதரி சவுந்தர்யப்ரியா(19) ஆகியோர் கடந்த சிலநாள்களாக சோகமாக இருந்துள்ளனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு நான்கு பேரும் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதையடுத்து நான்கு பேரும் பழனி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai