Enable Javscript for better performance
ஆட்டோ ஓட்டுநர் கழுத்தை அறுத்து கொலை- Dinamani

சுடச்சுட

    

    பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த மாரிக்கண்ணு மகன் கணேசன்(39). ஆட்டோ ஓட்டுநர். பேன்சிகடை, பைனான்ஸ் தொழிலும் நடத்துகிறார். இவரது மனைவி ராணி, அதிமுக வார்டு பிரதிநிதி ஆவார். ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டை விட்டு வெளியே சென்ற கணேசன் பழனியில் இருந்து பெரியாவுடையார் கோயில் செல்லும் வழியில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். சம்பவ இடத்துக்கு சென்ற பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அடிவாரம் பகுதியை சேர்ந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் சீனிவாசன் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். கொலையை நான்கு பேர் செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் கொலை செய்த நபர்கள் சென்னை ரயிலில் தப்பியிருக்கலாம் என் துப்பும் கிடைத்துள்ளதால் தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீஸார் தேடி சென்றுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai