Enable Javscript for better performance
இளம்பெண் கடத்தப்பட்டதாக புகார்- Dinamani

சுடச்சுட

    

    இளம்பெண் கடத்தப்பட்டதாக போலீஸில் தந்தை புகார் அளித்துள்ளார்.

    பழனி அருகே பச்சளநாயக்கன்பட்டி காலனி தெருவைச் சேர்ந்தவர் முருகன் (45). இவரது மகள் பச்சையாத்தாள் (19). இவர் ஒட்டன்சத்திரத்திலுள்ள தனியார் ஆலையில் கூலி வேலைக்கு சென்று வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி வேலைக்கு சென்ற பச்சையாத்தாள் வீடு திரும்பவில்லையாம். பல இடங்களிலும் தேடியும் கிடைக்காத நிலையில் முருகன் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமர் மகன் பாலன் மற்றும் அவரது பெற்றோர், உறவினர்கள் பச்சையாத்தாளை கடத்திச் சென்று விட்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் முருகன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai