Enable Javscript for better performance
கொடைக்கானலில் மழை: சுற்றுலாப் பயணிகள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் மழை: சுற்றுலாப் பயணிகள் அவதி

    By கொடைக்கானல்,  |   Published on : 05th May 2014 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானலில் மழை பெய்ததால் சுற்றுலா இடங்களை பார்க்க முடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர். ஆனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    கொடைக்கானலில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காலை முதல் மிதமான வெயிலும் இதமான சூழ்நிலையும் நிலவியது. இதனைத் தொடர்ந்து சுற்றுலா இடங்களைப் பார்க்க கடந்த இரண்டு நாள்களாக அதிகமான பயணிகள் கொடைக்கானல் வந்தனர். பல இடங்களில் லாட்ஜ்களில் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் வாகனத்திலேயே தங்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

    சுற்றுலா இடங்களான கோக்கர்ஸ்வாக், பிரையண்ட் பூங்கா, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர் ராக், குணாகுகை, மோயர்பாயிண்ட், அமைதிப் பள்ளத்தாக்கு, ஃபைன்பாரஸ்ட் ஆகிய இடங்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனர் வாகனப் போக்குவரத்தால் செவன்ரோடு, லாஸ்காட்சாலை, அப்சர்வேட்டரி சாலை, பெருமாள்மலை ஆகிய இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பிற்பகலில் சாரல் மழையும், அதனைத் தொடர்ந்து கனமழையும் பெய்தன.

    கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து பெய்த மழை விவசாயத்திற்கும், குடிநீருக்கும் உதவும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    நீர்வரத்து பகுதிகளான வெள்ளிநீர் வீழ்ச்சி, செண்பகா அருவி, வட்டக்கானல் அருவி, பாம்பார் அருவிகளில் நீர்வரத்து தொடங்கியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai