Enable Javscript for better performance
கொடைக்கானல் தனியார் பங்களாவில் விலங்கு தோல்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானல் தனியார் பங்களாவில் விலங்கு தோல்கள் பறிமுதல்

    By கொடைக்கானல்  |   Published on : 05th May 2014 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானலில் தனியார் பங்களாவில் அனுமதியில்லாமல் வைத்திருந்த அரிய வகை வன விலங்குகளின் தோல்கள்,தலைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால் பகுதியில் செந்தூர் என்பவருக்குச் சொந்தமான பங்களா உள்ளது. இதன் உரிமையாளர் வெளிநாட்டில் வசித்து வருகிறார் இந்த பங்களாவில் கூக்காலைச் சேர்ந்த கற்பக விநாயகம்(37)என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த பங்களாவில் வன விலங்குகளின் தோல்கள், கால்கள், தலை ஆகியவை இருப்பதாக கொடைக்கானல் வனத்துறையினருக்கு கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து செந்தூர் பங்களாவிற்கு மாவட்ட வனத்துறை அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் ரேஞ்சர் சக்திவேல் மற்றும் வனவர்கள் சென்று சோதனையிட்டனர். அப்போது பங்களாவில் பதப்படுத்தப்பட்ட சிறுத்தைப் புலி, புலியின் தலை, தோள்கள், கால்கள், புள்ளிமான், சருகுமான், அரிய வகை மானான நீல்மலை மான் ஆகியவற்றின் தோல்களும், நகங்களும் இருந்துள்ளன. இவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன் கூறியதாவது: கடந்த சில தினங்களுக்கு முன் கோயமுத்தூரில் 4 பேர் புலி,மற்றும் சிறுத்தைத் தோல் ஆகியவற்றை விற்பனை செய்ய முயன்றுள்ளனர். கோவை வனத்துறை அதிகாரிகள் அவர்களைப் பிடித்து விசாரனை நடத்தியதில், அதில் இரண்டு பேர் கொடைக்கானல் கூக்கால் பகுதியைச் சேர்ந்த செந்தூர் பங்களா காவலாளி கற்பக விநாயகம் என்றும் அவரது நண்பர் மன்னவனூரைச் சேர்ந்த பால்பாண்டி எனவும் மற்ற இருவர் கோவையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்தது.

    கொடைக்கானலைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில் செந்தூர் பங்களாவில் உள்ள சிறுத்தை, புலி ஆகியவற்றின் தலை, தோல்கள், கால்கள், மான், புள்ளி மான், நீல்மான் ஆகியவற்றின் தோல்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

    இந்தச் செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் தேவைப்பட்டால் நீதிமன்ற உத்தரவு பெற்று அவர்களிடம் மேல் விசாரணை நடத்தப்படும். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யார், கொடைக்கானல் பகுதிகளில் உள்ள வன விலங்குகளை வேட்டையாடி அவற்றின் தோல்கள், தலைகள் வேறு எங்கு கொண்டு செல்லப்பட்டது, விற்பனைக்கு உடந்தையாக யார் உள்ளனர் என விசாரிப்போம் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai