Enable Javscript for better performance
துடைப்பத்தை காணிக்கையாக செலுத்தும் விநோத திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    துடைப்பத்தை காணிக்கையாக செலுத்தும் விநோத திருவிழா

    By திண்டுக்கல்  |   Published on : 05th May 2014 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல்லில் அருகே தோமையார்புரத்தில் ஆண்டுதோறும் துடைப்பத்தை காணிக்கையாக செலுத்தும் விநோத திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு ஞாயிறுக்கிழமை நடைபெற்ற திருவிழாவில் பலர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    திண்டுக்கல்லில் அருகே தோமையார்புரத்தில் சிறிய மலைக்குன்று உள்ளது. இதில் புனித தோமையாருக்காக 125 ஆண்டுகளுக்கு முன்பு தேவாலயம் கட்டப்பட்டது. இந்த தேவாலயத்தில் வருடத்தில் 3நாள்கள் மட்டுமே திருவிழா கொண்டாடப்படுகிறது. ஈஸ்டாó திருவிழா முடிந்து, 2 வது ஞாயிற்றுக்கிழமை தோமையாபுரத்தில் உள்ள புனித தோமையாருக்கு திருவிழா நடத்தப்படும். இதற்காக கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமை வேண்டுதல் நிறைவேற்றும் நாளாக கொண்டாடப்பட்டது.

    நோய்கள், தோல் வியாதி, பருக்கள், தேமல் போன்றவற்றை நிவாóத்தி செய்து தருமாறு புனித தோமையாரிடம் வேண்டுதல்கள் வைக்கின்றனாó. விவாசயம் செழிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், பவ வேண்டுதல்களை வைக்கின்றனாó. வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் வீட்டை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் துடைப்பத்தை காணிக்கையாக செலுத்துகின்றனர்.திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கரூர், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள், புனித தோமையார் தேவாலயத்திற்கு வந்து மெழுகுவாóத்தி மற்றும் துடைப்பத்தை காணிக்கையாக ஞாயிற்றுக்கிழமை செலுத்தி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினாó.இதனை முன்னிட்டு தேவாலயத்தில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமானார் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai