Enable Javscript for better performance
பேரூராட்சி செயல் அலுவலருக்கு கொலை மிரட்டல் - Dinamani

சுடச்சுட

    

    பேரூராட்சி செயல் அலுவலருக்கு கொலை மிரட்டல்

    By திண்டுக்கல்  |   Published on : 05th May 2014 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேரூராட்சி செயல் அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், சின்னாளபட்டி பேரூராட்சியின் செயல் அலுவலர் கோட்டைச்சாமி. கடந்த சனிக்கிழமை (மே 3) 4ஆவது வார்டு திருநகர் காலனியில் கழிவுநீர்க் கால்வாயை சுத்தம் செய்வதற்காக பணியாளருடன் சென்றுள்ளார்.

    அப்போது திருநகர் காலனியில் வசிக்கும் விருமாண்டி என்பவரது மகன் பசும்பொன் என்ற ஆறுமுகம், செயல் அலுவலர் கோட்டைச்சாமியுடன் தகராறில் ஈடுபட்டாராம். மேலும் செயல் அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

    இதுகுறித்து செயல் அலுவலர் கோட்டைச்சாமி சின்னாளபட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் ஆறுமுகம் மீது வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai