Enable Javscript for better performance
வருணஜபத்தை தொடர்ந்து நத்தம் பகுதியில் மழை- Dinamani

சுடச்சுட

    

    தமிழக கோயில்களில் தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் வறட்சிநிலை மாற வேண்டியும் குடிநீர் தட்டுப்பாடு நீங்க வேண்டியும் வருணஜபம் கடந்த 28-ஆம் தேதி நடந்தது. இதையொட்டி ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. இதில் நத்தம் வட்டாரத்தில் சில நாள்களாக மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்தது. மழையின் அளவு நத்தத்தில் 36 மி.மீ. வரை பதிவாகியுள்ளது.

    உலுப்பகுடி முத்தாலம்மன் கோயில் திருவிழா

    நத்தம், மே 4: நத்தம் அருகே பிரசித்தி பெற்ற உலுப்பகுடி முத்தாலம்மன் கோயில் திருவிழா நடந்தது. மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் அலங்கரிக்கப்பட்டு சர்வ அலங்காரத்தில் அம்மன் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மறுநாள் அம்மன் பூஞ்சோலை சென்றது. முன்னதாக பூத்தட்டு, மாவிளக்கு எடுத்து வரப்பட்டது. இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai