Enable Javscript for better performance
அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்: அமைச்சர் திறந்து வைத்தார்- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்: அமைச்சர் திறந்து வைத்தார்

    By dn  |   Published on : 06th May 2014 11:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நத்தம் வட்டம், சாணார்பட்டி ஒன்றியம், அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை, செவ்வாய்க்கிழமை மின்துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன் திறந்து வைத்தார்.

       கோபால்பட்டி பேருந்து நிலையம் மற்றும் சாணார்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே ஒன்றிய அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்கள் திறக்கப்பட்டன.

     இவற்றை, தமிழக மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் இரா. விசுவநாதன், வேடசந்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பழனிச்சாமி, தொகுதி செயலர் கண்ணன், சாணார்பட்டி ஒன்றியச் செயலர் ராமராசு ஆகியோர் துவக்கி வைத்தனர்.

      பின்னர், பொதுமக்களுக்கு தண்ணீர், நீர் மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி, குளிர்பானங்கள் ஆகியன வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai