Enable Javscript for better performance
கொடைக்கானலில் மலர்க் கண்காட்சி: ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் மலர்க் கண்காட்சி: ஆலோசனைக் கூட்டம்

    By கொடைக்கானல்,  |   Published on : 06th May 2014 04:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானலில் கோடை விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. ராமசாமி தலைமை வகித்தார். வட்டாட்சியர் மாணிக்க கிருஷ்ணமூர்த்தி, டி.எஸ்.பி. மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுலா அலுவலர் குணசேகரன் வரவேற்றார்.

    கூட்டத்தில் கோடை விழாவின் துவக்க நிகழ்ச்சியை பிரையண்ட் பூங்காவில் நடத்துவது, சுற்றுலா இடங்களை சுத்தமாக வைத்திருப்பது, கழிப்பறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, தெரு விளக்குகள் போன்றவை நகராட்சி மற்றும் ஊராட்சி சார்பில் வைப்பது, சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் சுற்றுலா வழிகாட்டிகள், புகைப்பட கலைஞர்கள், குதிரை ஓட்டிகள் ஆகியோரை முறைப்படுத்தி அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது.சாலை வசதிகள் மேம்படுத்துதல், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கூடுதல் காவலர்கள் நியமனம், மருத்துவ வசதி, ஹோட்டல்களில் விலைப் பட்டியல் வைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. மேலும், விழாவில் நாய் கண்காட்சி, விளையாட்டுப் போட்டிகள், படகுப் போட்டிகள், மீன் பிடிக்கும் போட்டிகள் நடத்துவது குறித்தும் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக பேருந்து வசதிகள் அமைத்தல், தடையில்லா மின்சாரம் வழங்குதல், மற்றும் கோடை விழா நிகழ்ச்சிகளை கொடைக்கானல் கோடை பண்பலை தினமும் ஒலிபரப்பு செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதுகுறித்து ஆர்.டி.ஓ. ராமசாமி கூறியது:

    கோடை விழா வரும் 24-ஆம் தேதி துவங்கி 10 நாள்கள் நடைபெறும். தற்போது தேர்தல் விதிமுறைகள் நடத்தையில் உள்ளதால், மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைப் பெற்று தேர்தல் அதிகாரிகளின் உத்தரவுபெற்று விழா நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    கூட்டத்தில், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் (பொறுப்பு) சின்ராசு, மேலாளர்

    கள் பாண்டி, எபன்ராஜ், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சரவணன், அரசுப் போக்குவரத்து கழக கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கருணாகரன், ஹோட்டல், ரிசார்ட் அசோஷியேசன் குத்தாலிங்கம்,

    மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். உதவி சுற்றுலா அலுவலர் அன்பரசன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai