Enable Javscript for better performance
சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத் தலைவர் வெட்டிக் கொலை- Dinamani

சுடச்சுட

    

    சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத் தலைவர் வெட்டிக் கொலை

    By திண்டுக்கல்  |   Published on : 06th May 2014 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முன்விரோதம் காரணமாக சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத் தலைவர் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கு தொடர்பாக பெண், அவரது மகன்கள் உள்பட 10 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திண்டுக்கல் அடுத்துள்ள முத்தழகுப்பட்டியைச் சேர்ந்தவர் ஜோ.செபாஸ்தியார் (47). இவர் திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் உள்ள பழைய சுமை தூக்குவோர் சங்கத்தின் தலைவராகச் செயல்பட்டு வந்துள்ளார்.

    அதே பகுதியைச் சேர்ந்த பிரகாசம் என்பவருடன், கடந்த 2006ஆம் ஆண்டு லாரியிலிருந்து சுமை இறக்குவது தொடர்பாக செபாஸ்தியாருக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பிரகாசம் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அப்போது முதல் இருவரது குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

    இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன் செபாஸ்தியாரின் உறவினரான ஜெயராஜ் என்பவர் மீது பிரகாசம் தரப்பினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் திங்கள்கிழமை (மே 5) காலை வீட்டிலிருந்து குளியலறைக்குச் சென்ற செபாஸ்தியார் மீது சிலர் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    இதில் பலத்த காயமடைந்த செபாஸ்தியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக முத்தழகுப்பட்டியைச் சேர்ந்த பிரகாசத்தின் மனைவி பி.பாப்பாத்தி (எ) குழந்தை தெரசு, அவரது மகன்கள் பி.சின்னப்பன், பி.அருள் ஆரோக்கியராஜ், உறவினர்கள் அமல் அந்தோணி, அ.தங்கம்(எ) மதலை முத்து, ஜஸ்டின், சி.ஜான்சன் பிரபாகரன், அ.கண்ணன், அ.சின்னக்காளை மற்றும் அனுமந்தராயன்கோட்டையைச் சேர்ந்த இக்னேஷ் இன்பராஜ் ஆகியோர் மீது திண்டுக்கல் தெற்கு காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai