Enable Javscript for better performance
செந்துறை புனித சூசையப்பர் ஆலயப்பங்கு திருவிழா துவக்கம்- Dinamani

சுடச்சுட

    

    செந்துறை புனித சூசையப்பர் ஆலயப்பங்கு திருவிழா துவக்கம்

    By நத்தம்,  |   Published on : 06th May 2014 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செந்துறை புனித சூசையப்பர் ஆலய பங்குத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தில், பங்குத்திருவிழா ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 4 நாள்கள் சிறப்புடன் நடைபெறும். இவ்விழாவினையொட்டி கொடிபவனி முக்கிய வீதி வழியாக குரும்பபட்டி, செந்துறை, நேதாஜிநகர், சந்தைப்பேட்டை வழியாக கோயிலுக்கு வந்தது. அதன்பின்னர் கொசவபட்டி மறைவட்ட அதிபர் ஸ்டீபன் கஸ்பார், மங்கமனூத்து பங்குத்தந்தை செல்வராஜ் மற்றும் இன்னாசிமுத்து ஆகியோர் தலைமையில் கொடியேற்றமும், தொடர்ந்து திருப்பலியும் நடந்தது. இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் மறையுரை நிகழ்த்தப்படுகிறது. திங்கள்கிழமை புனித செபஸ்தியார் வேண்டுதல் பொங்கல் வைத்தனர்.

    அதனைத்தொடர்ந்து மகாராஷ்ட்ரா பங்குத்தந்தை சூசைராஜ் தலைமையில் திருப்பலி யும், இரவு செபஸ்தியார் சப்பரப்பவனியும் நடந்தன. செவ்வாய்க்கிழமை மாலை பொதுப்பொங்கல், அதனைத்தொடர்ந்து விருதுநகர் பங்குத்தந்தை எட்வர்டு தலைமையில் ஆடம்பர திருவிழா திருப்பலியும், இரவு இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. புதன்கிழமை அதிகாலையிலும், மாலையிலும் புனிதர்களின் அழகிய மின் அலங்கார தேர்பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை வந்துசேரும். இதனையடுத்து சென்னை அதனூர் மற்றும் எலபாக்கம் பங்குத்தந்தையர்கள் அந்தோணிகிறிஸ்டோ, அந்தோணிராஜ் ஆகியோர் தலைமையில் திருப்பலியும், கொடியிறக்கமும் நடைபெறும். ஏற்பாடுகளை செந்துறை பங்குத்தந்தை இன்னாசிமுத்து மற்றும் பங்குமக்கள், அன்பியங்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai