Enable Javscript for better performance
திண்டுக்கல், பழனி, வேடசந்தூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்: அமைச்சர் திறந்து வைத்தார்- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல், பழனி, வேடசந்தூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்: அமைச்சர் திறந்து வைத்தார்

    By திண்டுக்கல்  |   Published on : 06th May 2014 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோடை காலம் தொடங்கியதை முன்னிட்டு அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மின்துறை அமைச்சர் இரா.விஸ்வநாதன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

    அதிமுக பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் வேண்டுகோளுக்கு இணங்க, ஆண்டுதோறும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கோடை காலத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதியிலும் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

    முதலில் திண்டுக்கல் நகர நிர்வாகிகள் சார்பில் பேருந்து நிலையம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை, மாவட்டச் செயலரும், மின்துறை அமைச்சருமான இரா.விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திறந்து வைத்தார்.

    திறப்பு விழா நிகழ்ச்சியையொட்டி தண்ணீர் மட்டுமின்றி, குளிர்பானம், இளநீர், தர்பூசணி, பப்பாளிப் பழம், வெள்ளரிக்காய் போன்ற குளிர்ச்சி தரும் பழங்கள் வழங்கப்பட்டன. மேலும் தண்ணீர் பந்தலில் வாழைப்பழத் தார்களும் தொங்கவிடப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் அருகே திண்டுக்கல் தொகுதி அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் மேயர் வி.மருதராஜ், மாவட்ட அவைத்தலைவர் சீ.சீனீவாசன், நத்தம் தொகுதிச் செயலர் ஆர்.வி.என்.கண்ணன், மாவட்ட கூட்டுறவு சங்க செயலர் பி.கே.டி.நடராஜன், நகரச் செயலர் வெ.பாரதிமுருகன், மாவட்ட ஜெயலலிதா பேரவைத் துணைத் தலைவர் சோ.சுருளிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    வேடசந்தூர்: வேடசந்தூர் வட்டத்தில் அய்யலூர் நகர அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை வேடசந்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பழனிச்சாமி திறந்து வைத்தார்.

    தொடக்க நிகழ்ச்சி என்பதால் குளிர்பானங்களும் வழங்கப்பட்டன. நிகழ்சசியில் வடமதுரை ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகர்சாமி, அய்யலூர் நகர செயலர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பழனி: பழனியில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. பழனி பேருந்து நிலையம் அருகே நகர அதிமுக சார்பிலும், பழனி தாலுகா அலுவலகம் முன்பு ஒன்றிய அதிமுக சார்பிலும் நீர்மோர் பந்தல்கள் திறக்கப்பட்டன.

    தமிழக மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விசுவநாதன், திண்டுக்கல் மக்களவைத்தொகுதி வேட்பாளர் உதயகுமார் ஆகியோர் நீர்மோர் பந்தல்களை துவக்கி வைத்தனர். பொதுமக்களுக்கு தண்ணீர், நீர்மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி, குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

    பழனி எம்எல்ஏ. வேணுகோபாலு, மாவட்ட பொருளாளர் குமாரசாமி, மாவட்ட அவைத்தலைவர் சீனிவாசன், ஒன்றியச் செயலர் ஆறுமுகம், தொகுதிச் செயலர்கள் கண்ணன், மகுடீஸ்வரன், நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், நெய்க்காரபட்டி பேரூராட்சி தலைவர் விஜயசேகரன், பாலசமுத்திரம் பேரூராட்சி துணைத் தலைவர் சக்திவேல், மாவட்ட மாணவரணி செயலர் அன்வர்தீன், நகர இளைஞரணி சேக், மாவட்ட ஜெ. பேரவை ராஜாமுகமது உள்ளிட்ட ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai