Enable Javscript for better performance
பழனியில் டயர்கள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    பழனி-திண்டுக்கல் சாலையில் திருநகரில் தனியார் நிறுவனத்தின் டயர் விற்பனை நிலையம் உள்ளது. இதன் உரிமையாளர் சிவசாமி(54) சனிக்கிழமை இரவு கடையை அடைத்து விட்டுச் சென்றுள்ளார். மீண்டும் ஞாயிற்றுக்கிழமை கடையை திறக்க வந்தபோது கடையின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பெரிய டயர்கள் ஐந்தும், டாடா ஏஸ் வண்டியின் டயர்கள் 30-ம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய் ஆகும். இதுகுறித்து சிவசாமி கொடுத்த புகாரின் பேரில் பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai