Enable Javscript for better performance
பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்

    By பழனி  |   Published on : 06th May 2014 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனி அருள்மிகு இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது.

    பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயில் அருள்மிகு இலக்குமி நாராயணப் பெருமாள் கோயில். இக்கோயிலில் திங்கள்கிழமை சித்திரைத் திருவிழா திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது.

    திங்கள்கிழமை அதிகாலையில் விக்னேஷ்வர் அனுமதி பெறப்பட்டு சங்கு, சக்கரம், திருநாமம், கருடாழ்வார், பூஜைப் பொருள்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஐந்து கலசங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. கொடிப்படம் கோயிலை வலம் வர செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின் கொடிப்பாடல்கள் பாடப்பட்டு செப்புக்கொடி மரத்தில் காலை ஆறு மணிக்கு மேல் திருக்கொடியேற்றம் நடத்தப்பட்டது. கம்பத்துக்கு மாவிலை, தர்ப்பைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பூஜைகளை திருவள்ளரை கோயில் வாசுதேவ பட்டர் தலைமையில் வரதராஜ அய்யங்கார், வெங்கட்ராம அய்யங்கார், சீனிவாசன் அய்யங்கார், கார்த்திக் அய்யங்கார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    கொடியேற்றம் முடிந்த பின் சுவாமி சப்பரத்தில் நான்கு ரதவீதி உலா எழுந்தருளினார். 10 நாள்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் அலங்காரம் செய்யப்பட்டு சிம்மவாகனம், அனுமார்வாகனம், தங்கக்குதிரை, சேஷவாகனங்களில் நான்குரத வீதிகளில் உலா வரவுள்ளார்.

    மே 11ஆம் தேதி மாலை திருக்கல்யாணமும், 13ஆம் தேதி காலை திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது. விழா நாள்களில் கோயில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai