பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
By பழனி | Published on : 06th May 2014 12:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பழனியில் பெண்ணிடம் பத்து பவுன் நகையை மோட்டார்சைக்கிளில் வந்த திருடர்கள் பறித்து சென்றனர்.
பழனி வஉசி தெருவை சேர்ந்தவர் தண்டபாணி மனைவி வேலுமணி(66). இவரது உறவினருக்கு உழவர் சந்தை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. திங்கள்கிழமை இரவு குழந்தையை பார்க்கச் சென்ற வேலுமணி குழந்தையை பார்த்து விட்டு சண்முகபுரம் ரெட்கிராஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மர்மநபர் வேலுமணியை கீழே தள்ளிவிட்டு கழுத்தில் இருந்த 10பவுன் நகையை பறித்துவிட்டு, சிறிது தொலைவில் மோட்டார்சைக்கிளில் தயாராக இருந்த மற்றொரு நபருடன் ஏறி தப்பிச் சென்றார். கீழே விழுந்த வேலுமணி தலையில் பலத்த காயமடைந்ததால் அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.