Enable Javscript for better performance
பெண்ணின் தந்தைக்கு கொலை மிரட்டல்: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பழனி அருகே பெண்ணின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

    பழனி அருகே விருப்பாட்சி ஜீவாநகரைச் சேர்ந்தவர் பழனி மகன் பெரியமுருகன். இவரது மூத்த மகளை அதே பகுதியைச் சேர்ந்த முத்தன் மகன் கணேஷ் (23) என்பவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் பெண் கேட்டு சென்றுள்ளார். ஆனால் பெரியமுருகன் ஒத்துக்கொள்ளவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் வெள்ளிக்கிழமை பெரியமுருகனை திட்டி அரிவாளால் கொலை செய்து விடுவதாக மிரட்டினாராம். இதுகுறித்து பெரியமுருகன் கொடுத்த புகாரின் பேரில் சத்திரப்பட்டி போலீஸார் கணேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai