Enable Javscript for better performance
வணிகர் தின மாநாடு: பழனியில் கடைகள் அடைப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் நடைபெறும் வணிகர் தின மாநாட்டை முன்னிட்டு பழனியில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டன.

    கோவை கொடீசியா அரங்கில் திங்கள்கிழமை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் 31ஆவது வணிகர் தின மாநாடு நடைபெற்றது. மாநாட்டை முன்னிட்டு பழனி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சங்க கவுரவத் தலைவர் கந்தவிலாஸ் செல்வகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் வணிகர்கள் பங்கேற்றனர். இதனால் மார்க்கெட், கடைவீதி, அடிவாரம் உள்ளிட்ட பல இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    பொதுமக்கள், பக்தர்கள் நலனுக்காக சிற்றுண்டி கடைகள், தேநீர் கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. இதற்கான ஏற்பாடுகளை சங்கத் தலைவர் தண்டபாணி, செயலர் முகமது எகையா, பொருளாளர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai