Enable Javscript for better performance
ஆசிரியர் தகுதித் தேர்வு: 991 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியர் தகுதித் தேர்வு: 991 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

    By dn  |   Published on : 07th May 2014 12:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆசிரியர் தகுதித் தேர்வில் மாற்றி அமைக்கப்பட்ட தகுதி மதிப்பெண் அடிப்படையில், தேர்வு பெற்ற 991 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

      கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் வெற்றிபெற 90 மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதனால், குறைவானவர்களே வெற்றி பெற்றனர். இதனையடுத்து, தகுதி மதிப்பெண்ணை குறைப்பதற்கு தேர்வர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

      அதனை ஏற்று 5 சதவீதம் குறைக்கப்பட்டு, 82.5 மதிப்பெண் எடுத்தால் போதுமானது என, தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், தமிழகம் முழுவதும் பலர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் வாய்ப்பு ஏற்பட்டது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி செவ்வாய்க்கிழமை (மே 6) முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

      அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 991 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி, திண்டுக்கல் புனித லூர்து அன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

      சான்றிதழ் சரிபார்ப்புக்காக, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், பழனி மற்றும் திண்டுக்கல் கல்வி மாவட்ட அலுவலர்கள், மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆய்வாளர், மேல் நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் கொண்ட 8 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

     திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தொழில் கல்வி இணை இயக்குநர் தர்மராஜேந்திரன் மற்றும் திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பா. சுகுமார் தேவதாஸ் ஆகியோர் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகளை பார்வையிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai