Enable Javscript for better performance
கொடைக்கானலில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் மழை பெய்ததை அடுத்து, விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

      கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை தினமும் கணிசமாக அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் லேசான சாரல் மழையும், அவ்வப்போது மேகமூட்டமும் நிலவி வருவதால், இதமான சூழ்நிலையை பயணிகள் வெகுவாக அனுபவித்து வருகின்றனர்.

      கொடைக்கானலில் கடந்த பல மாதங்களாக பருவமழை பெய்யாததால், நகர்ப் பகுதி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    உணவகங்களிலும், விடுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் தங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

      இதைத் தொடர்ந்து, கடந்த மூன்று நாள்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால், நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. இதனால், கொடைக்கானல் புறநகர்ப் பகுதிகளில் ஓரளவுக்கு தண்ணீர்ப் பற்றாக்குறை நீங்குவதற்கு வாய்ப்புள்ளது.

    மேலும், விவசாயம் செய்வதற்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

      மேலும், செவ்வாய்க்கிழமை மாலை மிதமான மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர். இதனால், கொடைக்கானலில் குளுமை நிலவி வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai