Enable Javscript for better performance
திண்டுக்கல் பகுதியை குளிர்வித்த சாரல் மழை- Dinamani

சுடச்சுட

  

  அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையிலும் பெய்து வரும் கோடை மழையால், திண்டுக்கல் பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும், கடந்த சில நாள்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், ஒரு வாரத்துக்கு முன்பு வரை நிலவி வந்த வெப்பம் தணிந்து, குளுமை ஏற்படத் தொடங்கியுள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால், கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய  அக்னி நட்சத்திரத்தின் வெப்ப நிலை அதிகரிக்கவில்லை.

     இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை முதலே சிறுமலை வனப்பகுதியில் லேசான சாரல் மழை பெய்யத் தொடங்கியது. பிற்பகலில் பலத்த மழையாக மாறியது.

    அதேநேரம், திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலும் மாலையிலிருந்து லேசான தூறல் இருந்தது. இரவு வரை இந்தத் தூறல் தொடர்ந்ததால், நகரில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai