Enable Javscript for better performance
பேன்சி கடைக்காரர் கொலை வழக்கில் பெண் உள்பட 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பழனி அருகே பேன்சி கடைக்காரர் கொலை வழக்கில் ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

      பழனியில் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையைச் சேர்ந்த பேன்சி கடைக்காரரான கணேசன் என்பவர், பெரியாவுடையார் கோயில் செல்லும் வழியில், கோதைமங்கலம் நீரேற்ற மோட்டார் தொட்டி அருகே இரு தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.  இதையடுத்து, பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். மேலும், கொலைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

      பழனி அருகே கரிக்காரன் புதூரைச் சேர்ந்தவர் பிச்சைத்தேவர் மகன் நல்லுசாமி (38). இவர், கஞ்சா விற்று வந்துள்ளார். இவரது இரண்டாவது மனைவி மகாலட்சுமி (22), சத்யா நகரில் வசித்து வருகிறார்.

      இந்நிலையில், நல்லுசாமி அடிக்கடி அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் மதுக்கூடத்தில் குடிப்பது வழக்கமாம். அப்போது, அங்கு வந்த பேன்சி கடைக்காரர் கணேசனுக்கும், நல்லுசாமிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், நல்லுசாமியை கணேசன் தாக்கியுள்ளார். தொடர்ந்து, கஞ்சா விற்பது குறித்து நல்லுசாமியை கணேசன் மிரட்டி வந்துள்ளார்.

      இதனால் ஆத்திரமடைந்த நல்லுசாமி, மகாலட்சுமியிடம் விவரத்தைக் கூறியுள்ளார். பின்னர், இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர்.

     அதன்படி, கணேசனின் செல்போனுக்கு பிரியா என்ற பெயரில் மகாலட்சுமியை பேசி பழக செய்துள்ளார். சம்பவத்தன்று, மகாலட்சுமி மூலம் கணேசனை பெரியாவுடையார் கோயில் அருகே வருமாறு அழைத்துள்ளார்.   இதை நம்பி, கணேசன் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார். அப்போது, நல்லுசாமி மற்றும் இவரது நண்பர்களான வண்டிவாய்க்காலைச் சேர்ந்த மணி மகன் கணேசன் (24), பழனி 13ஆவது வார்டை சேர்ந்த வெள்ளைக்கண்ணு மகன் அய்யாவு (32) ஆகியோர் சேர்ந்து, பேன்சி கடைக்காரர் கணேசனை கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளனர்.

      போலீஸார், செல்போனில் பதிவான எண்கள் மற்றும் பல்வேறு குறுக்கு விசாரணை மூலம் செவ்வாய்க்கிழமை, நல்லுசாமி, மகாலட்சுமி, குருசாமி ஆகியோரைக் கைது செய்தனர்.  மேலும், தலைமறைவாகவுள்ள அய்யாவு என்பவரை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai