Enable Javscript for better performance
பொறியியல் கலந்தாய்வுகளை அந்தந்த மாவட்டத்திலேயே நடத்த கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பொறியியல் கலந்தாய்வுகளை அந்தந்த மாவட்டத்திலேயே நடத்த கோரிக்கை

    By dn  |   Published on : 07th May 2014 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொறியியல் பட்டப்படிப்பு தொடர்பான கலந்தாய்வுகளை, அந்தந்த மாவட்டத்திலேயே நடத்த ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

      தமிழகத்தில் மே மாதம் 3ஆம் தேதி முதல், பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப் படிவங்களை, தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும், வரும் 12ஆம் தேதி முதல் மருத்துவம், வேளாண்மை போன்ற தொழிற் படிப்புக்கான விண்ணப்பங்களும் வழங்கப்பட உள்ளன.

       தமிழக அரசு, கல்வித் துறைக்கு விலையில்லா சைக்கிள், விலையில்லா மடிக்கணினி, நோட்டுப் புத்தகம், சத்துணவு மற்றும் தனியார் பள்ளியில் 25 சத இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல சலுகைகளை வழங்கி வரும் நிலையில், தொழிற்படிப்பு விண்ணப்பப் படிவங்கள் ரூ. 500, சலுகைப் பிரிவில் ரூ. 250 என கட்டணம் செலுத்தி வாங்கும் நிலை உள்ளது.

      வரும் காலங்களில் அனைத்துப் பிரிவினருக்கும் விண்ணப்பங்களை விலையின்றி வழங்கவும், நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பு தொடர்பான கலந்தாய்வுகளை அந்தந்த மாவட்டங்களிலேயே நடத்தவும், ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai