Enable Javscript for better performance
வத்தலகுண்டு அருகே மின்சாரம் பாய்ந்து ஆலைத்  தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    வத்தலகுண்டு அருகே மின்சாரம் பாய்ந்து ஆலைத்  தொழிலாளி சாவு

    By dn  |   Published on : 07th May 2014 12:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள தனியார் ஆலையில் மரக் கிளையை வெட்டியபோது, மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

       வத்தலகுண்டு அருகே தேங்காய் பவுடர் தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த ஆலையில், கடந்த 15 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார் பழைய வத்தலகுண்டுவைச் சேர்ந்த காளியப்பக் கவுண்டர் மகன் ஆறுமுகம் (30). இவர், ஆலை அருகேயுள்ள மரத்தின் கிளையை ஆலை அதிபர் கூறியதால் வெட்டியுள்ளார்.

      அப்போது, மின்சார வயர் உரசியுள்ளது. இதில், மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட ஆறுமுகம் மயங்கினார்.

      உடனடியாக, வத்தலகுண்டு லியோனார்டு மருத்துவமனையில் சேர்த்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் உயிரிழந்தார். இது குறித்து, பட்டிவீரன்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

      தொடர்ந்து, உயிரிழந்த ஆறுமுகத்தின் உறவினர்கள் நஷ்டஈடு கேட்டு பிரேதத்தை வாங்க மறுத்தனர். எனவே, சம்பவ இடத்துக்கு, வத்தலகுண்டு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வினோஜி மற்றும் விளாம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சார்பு- ஆய்வாளர்கள் ஆனந்தி முருகேசன், காமாட்சி ஆகியோர் விரைந்து வந்தனர்.  பின்னர், காப்பீடு மூலம் உரிய நஷ்டஈடு பெற்றுத் தர ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டதால், போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai