Enable Javscript for better performance
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கேரள அரசு மதிக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கேரள அரசு மதிக்க வேண்டும்

    By பழனி  |   Published on : 08th May 2014 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை, கேரள அரசு மதிக்க வேண்டும் என பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.

    தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ள பாஜக மாநிலத் துணைச் செயலரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச். ராஜா, புதன்கிழமை பழனி மலை கோயிலில் தங்கத் தேர் புறப்பாடு செய்தார்.

    பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, கேரள அரசு மதித்து நடக்க வேண்டும்.

    மே 16ஆம் தேதிக்குப் பின் அமையவுள்ள நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், இதை அமல்படுத்த தமிழக பாஜக ஏற்பாடு செய்யும்.

    பொங்கல் இல்லை என்றால் தமிழன் இல்லை. ஜல்லிக்கட்டு இல்லை என்றால் பொங்கல் இல்லை. ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாசாரம், பண்பாடுகளில் ஒருங்கிணைந்த அங்கமாகும். இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.

    தமிழகத்தில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பசுக்கள் கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, வதைக்கப்படுகின்றன. பின்னர், அவற்றின் இறைச்சிகள் வளைகுடா நாடுகளுக்கு விற்பனைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதை தட்டிக்கேட்க முடியவில்லை. தமிழகத்தில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளைகள் அதிகரித்து வருகின்றன.

    தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai