Enable Javscript for better performance
கேபிள் டிவி உரிமையாளர் வீட்டில் 17 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் கொள்ளை- Dinamani

சுடச்சுட

    

    கேபிள் டிவி உரிமையாளர் வீட்டில் 17 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் கொள்ளை

    By திண்டுக்கல்,  |   Published on : 08th May 2014 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் நேருஜி நகர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் ரமேஷ் முரளி (46). திண்டுக்கல் பகுதியில் கேபிள் டிவி நடத்தி வருகிறார்.

    இரண்டு நாள்களுக்கு முன், குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றிருந்தாராம். இதனால், வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், செவ்வாய்க்கிழமை இரவு முன்கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். புதன்கிழமை காலை வீட்டின் முன்கதவு திறந்து கிடப்பதைப் பார்த்து சந்தேகம் அடைந்த குடியிருப்புவாசிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், வீட்டின் உரிமையாளருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து, போலீஸ் தரப்பில் தெரிவித்தது: பீரோவில் இருந்த 17.5 பவுன் நகைகள், ரூ.1.5 லட்சம் பணம் மற்றும் 500 கிராம் வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போனதாக, புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், விசாரணை நடத்தி வருகிறோம் எனத் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai