Enable Javscript for better performance
பழனியில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    முல்லைப் பெரியாறு அணை சம்பந்தமான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, பழனியில் புதன்கிழமை அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த, தமிழகத்துக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    இந்தத் தீர்ப்பை அடுத்து, பழனி தலைமை தபால் நிலையம் முன்பு, அதிமுக மாவட்ட விவசாய அணி சார்பில், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். மேலும், அவ்வழியே சென்ற பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட விவசாய அணி செயலர் கோதை நடராஜன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் ஆறுமுகம், பழனி தொகுதிச் செயலர் மகுடீஸ்வரன், நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், நெய்க்காரபட்டி பேரூராட்சித் தலைவர் விஜயசேகரன், சிவகிரிப்பட்டி ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    விவசாய சங்கங்கள் வரவேற்பு: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதை, விவசாய சங்கங்கள் வரவேற்றுள்ளன. தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு மாநிலப் பொதுச் செயலர் ஏ.எம்.எஸ். இளங்கோவன்: பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வதால், விவசாய நிலங்கள் அதிக பாசன வசதி பெறும். தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக, தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    வத்தலகுண்டு விவசாயிகள் சங்கம், பெரிய கண்மாய் பாசன வசதி இயக்குநர் மணிபாரதி:

    உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியுள்ளதை, விவசாயிகள் சங்கத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தற்சமயம், ஒருபோக நெல் விவசாயம் செய்கிறோம். அணையின் நீர்மட்டம் உயர்த்துவதால் நீர்வரத்து அதிகரிக்கும். இதனால், இருபோக நெல் விவசாயம் செய்ய வசதி ஏற்படும். இது, தென் தமிழக விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai