Enable Javscript for better performance
பழனியில் சாரல் மழை: மக்கள் மகிழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    பழனியில் பெய்து வரும் தொடர் சாரல் மழையால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்த நிலையில், பழனி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வந்தது. பழனி அருகே தொப்பம்பட்டி, பாப்பம்பட்டி, அமரபூண்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் தென்னந் தோப்புகள் காய்ந்து சாய்ந்துவிட்ட நிலையில், காற்றில் ஈரப்பதம் இல்லாமல் விளைநிலங்கள் பாளம் பாளமாக விரிந்து கிடந்தன. பல இடங்களிலும் பல நூறு அடிக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்தும் தண்ணீர் பெற முடியவில்லை. கிராமங்களிலேயே பொதுமக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை நேரிட்டது.

    கடந்த இரு தினங்களாக பெய்து வரும் சாரல் மழையினால், கத்திரி வெயிலின் வெப்பம் காணாமல், குளுமையான சூழல் நிலவி வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு துவங்கிய சாரல் மழை விடிய, விடிய பெய்தது. புதன்கிழமையும் விட்டு விட்டுத் தொடர்ந்தது. இதனால் பல்வேறு இடங்களிலும் மழைநீர் தேங்கியது. சுமார் 36 மி.மீ. அளவுக்கு மழை பெய்திருந்தாலும், உழவுக்கு போதிய அளவு மழை இல்லை. மேலும், பழனியைச் சுற்றியுள்ள அணைகளுக்கும் நீர்வரத்து இல்லை. இருப்பினும், இதேபோல் தொடர்ந்து மழை பெய்தால் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு குறையும் என்று, பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai