Enable Javscript for better performance
மழை பெய்ததால் குளம் நிரம்பியது:திருவிழா நடத்தும் மக்கள் மகிழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    மழை பெய்ததால் குளம் நிரம்பியது:திருவிழா நடத்தும் மக்கள் மகிழ்ச்சி

    By திண்டுக்கல்,  |   Published on : 08th May 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோடை மழை பெய்து குளம் நிரம்பியதால், குஜிலியம்பாறை அருகே கோயில் திருவிழாவுக்கு தீர்த்தம் எடுக்கச் செல்லும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்துள்ள சின்னுலுப்பை ஊராட்சிக்குள்பட்டது சி.அம்மாபட்டி கிராமம். இந்தப் பகுதியில், அருள்மிகு மாரியம்மன், காளியம்மன், பகவதி அம்மன் திருக்கோயில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் இந்த கோயிலுக்கு திருவிழா நடப்பது வழக்கம்.

    திருவிழாவின்போது, கோயிலுக்கு அருகில் உள்ள சின்னக் குளத்திலிருந்து தீர்த்தம் எடுத்துச் செல்வது வழக்கம். அதேபோல், குளத்தில் உள்ள நீருக்கு மேல் அம்மன் ஊர்வலம் நடப்பதும் இந்த பகுதியின் சிறப்பாகக் கூறப்படுகிறது.

    கடந்த 8 ஆண்டுகளாக போதிய மழையில்லாததால், குளத்தில் நீர் இல்லாத சூழ்நிலை நிலவியது. இதனால், அம்மன் ஊர்வலம் நீர் இல்லாத வறண்ட நிலப்பரப்பில் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை பெய்த மழையினால் குளம் நிரம்பத் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து, செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கிய கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் ஊர்வலம் வியாழக்கிழமை குளத்து நீர் வழியே நடைபெற உள்ளதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai