Enable Javscript for better performance
வாக்கு எண்ணிக்கை மையத்தில் போதையில் இருந்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    வாக்கு எண்ணிக்கை மையத்தில் போதையில் இருந்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம்

    By திண்டுக்கல்  |   Published on : 08th May 2014 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாக்கு எண்ணிக்கை மையத்தில் குடி போதையில் பணிபுரிந்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. முத்திரையிடப்பட்டு தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ள இந்த வாக்குப் பெட்டிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் த.ஜெயசந்திரன் நாள்தோறும் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். இந் நிலையில், சில நாள்களுக்கு முன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தபோது, அங்கு பணியிலிருந்த தலைமைக் காவலர் சந்தோஷ் என்பவர் மது போதையில் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து விசாரணை மேற்கொண்ட எஸ்.பி. த. ஜெயசந்திரன், பணியிலிருந்தபோது மது அருந்திய குற்றத்துக்காக தலைமைக் காவலர் சந்தோஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    சந்தோஷ், திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai