Enable Javscript for better performance
நத்தத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    நத்தத்தில் பிரதான சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் போக்குவரத்துக்கு பெரிதும் தொந்தரவு ஏற்பட்டது. மேலும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்து வந்தது. இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து பேரூராட்சி நிர்வாக அதிகாரி மத்தியாஸ், துப்புரவு ஆய்வாளர் சடகோபி மற்றும் பணியாளர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். சில இடங்களில் கடைக்காரர்கள் அவர்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டனர். தொடர்ந்து நத்தம் பேருந்து நிலையத்தில் இருந்த நடைபாதைக் கடைகளும் அகற்றப்பட்டன. போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கரவாகனங்களையும் அங்கிருந்து எடுக்குமாறு வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கைவிடுத்தனர். தொடர்ந்து மீனாட்சிபுரம், மூன்றுலாந்தர் பகுதிகளிலும் இந்தப் பணிகள் நடைபெற்றன. இப்பணியின்போது நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai