Enable Javscript for better performance
நத்தம் பகுதியில் தொடர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    நத்தம் பகுதியில் தொடர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

    By நத்தம்,  |   Published on : 09th May 2014 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நத்தம் பகுதியில் பெய்துவரும் கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கடந்த வாரம் முதல் கோடை மழை பெய்து வருகிறது. இப்பகுதி முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். மா, தென்னை, புளி, கொய்யா உள்ளிட்ட பலன் தரும் மரங்கள் பெருமளவில் இங்கு பயிரிடப்படுகின்றன. இவைதவிர மானாவாரியாக சோளம், மொச்சை, கேழ்வரகு, உளுந்து, எள், பருத்தி போன்ற பயிர்வகைகள் பயிரிடப்படுகின்றன. கடந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் கடந்த 3 மாதங்களாக அதிக அளவு வெப்பத்தால் தென்னை, மா மரங்கள் பட்டுப்போகும் அளவுக்கு வறட்சி ஏற்பட்டது.

    இந்நிலையில் விவசாயிகள் பயிர்களைக் காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சி வந்தனர். அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் அனல் காற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கோடை மழை பெய்யத் தொடங்கியது. நத்தம் பகுதியில் மிதமானது முதல் கனமான மழை பெய்தது. இந்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த மழை இன்னும் சில நாள்கள் நீடிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். அதன் மூலம் கண்மாய், குளங்களில் நீர் நிறையும் என கருதுகிறார்கள்.

    இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், கோடை மழை பெருமழையாக இல்லாமல் சாரலாக அவ்வப்போது பெய்தது. இதனால் அக்னி வெயில் தணிந்துள்ளது. பூமி குளிர பெருமழை பெய்ய வேண்டும். இதன்மூலம் தென்னை, மா மரங்கள் மீண்டும் உயிர்பெறும். என்றாலும் தற்போது உள்ள நிலைமைப்படி வறட்சி நிலை மாறி பசுமையாக பலன்தரும் மரங்களும் மானாவாரி பயிர்களும் காணப்படுகிறது என்று அவர்கள் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai