Enable Javscript for better performance
பழனியில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பழனியில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பு

    By பழனி,  |   Published on : 09th May 2014 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனியில் காவல்துறையைக் கண்டித்து, வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பழனி வழக்குரைஞர் சங்கத்தைச் சேர்ந்த கார்த்திக் கண்ணன் என்பவர், சில தினங்களுக்கு முன் அடிவாரம் காவல் நிலையத்தில் அவரது தரப்பினர் தொடர்பாக விளக்கம் கேட்கச் சென்றுள்ளார். அப்போது, காவல் நிலையத்தில் இருந்த சார்பு-ஆய்வாளர் வினோதா, சிறப்பு சார்பு-ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர், கார்த்திக் கண்ணனை தரக்குறைவாக நடத்தியுள்ளனர்.

    மேலும், அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தாக்கவும் முற்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, அலுவலகம் திரும்பிய கார்த்திக் கண்ணன் வழக்குரைஞர் சங்கத்தில் முறையிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, போலீஸாருக்கும், வழக்குரைஞர்களுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    வியாழக்கிழமை, பழனியில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால், பழனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிகள் பாதிப்புக்குள்ளாகின. மேலும், வழக்கு சம்பந்தமாக நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்த காவல் துறையினரை வழக்குரைஞர்கள் அனுமதிக்க மறுத்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வழக்குரைஞர்களை அவமதித்த காவல் துறையினர் மீது தகுந்த துறை ரீதியான நடவடிக்கை எடுக்காவிடில், போராட்டம் தீவிரமாகும் என வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai