Enable Javscript for better performance
வாகனம் மோதியதில்நடந்துசென்ற இளைஞர் பலி- Dinamani

சுடச்சுட

    

    அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சாலையில் நடந்து சென்ற இளைஞர் உயிரிழந்தார்.

    திண்டுக்கல் மாவட்டம், நல்லமநாயக்கன்பட்டி அடுத்துள்ள புளியம்பட்டியைச் சேர்ந்தவர் கா.சக்திவேல் (27). இவர் எரியோடு கிராம நிர்வாக அலுவலகம் அருகே புதன்கிழமை மாலை நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில் பலத்த காயம் அடைந்த சக்திவேலை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து சக்திவேலின் மனைவி சுமதி (22) அளித்த புகாரின் பேரில், எரியோடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai